உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2026-ஆம் ஆண்டிற்கான தனது ‘மாணவர் ஆராய்ச்சியாளர்’ (Student Researcher Programme 2026) பயிற்சித் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப உலகில் நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பெரிய அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

Continues below advertisement

கல்வித் தகுதி எப்படி?

கணினி அறிவியல் (Computer Science), மொழியியல், புள்ளியியல், பயன்பாட்டுக் கணிதம், பொருளாதாரம் அல்லது இயற்கை அறிவியல் ஆகிய துறைகளில் இளநிலை (Bachelor's), முதுநிலை (Master's) அல்லது ஆராய்ச்சிப் படிப்பு (PhD) படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

என்ன தகுதி?


விண்ணப்பதாரர்கள் இயந்திர கற்றல் (Machine Learning), செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர் விஷன், தரவு அறிவியல் அல்லது மென்பொருள் பொறியியல் போன்ற ஏதேனும் ஒரு கணினி அறிவியல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் C++, Java, Python, Go போன்ற கணினி நிரலாக்க மொழிகளில் ஒன்றிலாவது நிபுணத்துவம் பெற்றிருப்பது அவசியம்.

Continues below advertisement

முன்னுரிமை யாருக்கு?


ஆராய்ச்சித் துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்கள், ஆய்வகங்களில் பணியாற்றியவர்கள் மற்றும் முன்னணி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட மாணவர்களுக்குத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். முழு நேரப் படிப்பில் உள்ள மாணவர்கள் இந்தப் பயிற்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் படிப்பைத் தொடர்பவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  1. ஆர்வமுள்ள மாணவர்கள் Google Careers இணையதளத்திற்குச் சென்று 'Apply' பிரிவை கிளிக் செய்ய வேண்டும்.

  2. அல்லது நேரடியாக https://www.google.com/about/careers/applications/jobs/results/93865849051325126-student-researcher-2026 என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம். 
  3. தங்களின் புதுப்பிக்கப்பட்ட பயோடேட்டாவை (Resume) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  4. கல்விப் பிரிவில், தற்போதைய அல்லது சமீபத்திய அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியலை (Transcript) ஆங்கிலத்தில் பதிவேற்ற வேண்டும்.

  5. "Degree Status" பிரிவில் "Now attending" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 26, 2026.

கூகுள் நிறுவனத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.