விழுப்புரம் : சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் இருந்தது நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது அரசுக்கே தெரியாமல் வந்த அறிவிப்பு எனவும் இரு மொழிக்கொள்கை குறித்து பாஜக தமிழக தலைவர்  அண்ணாமலை  நேருக்கு நேராக விவாதிக்க தயாரா என்றும் அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார். 


தமிழகத்தில் இயங்க கூடிய 11 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியில் பொறியியல் பாட்டபிரிவில்  சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் கற்பிக்கபட்டு வருவது தற்காலிகமாக நீக்கபடுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக அறிவித்தது. இது தொடர்பாக விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, “பொறியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் செயல்பட்டு வந்த இரு பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக  அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறியதின் அடிப்படையில்  நீக்க வேண்டுமென துணை வேந்தரிடம் கூறியபின்  அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில கல்வி துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெறாமல் அறிவிப்பு வெளியிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளோம். இது போன்ற அறிவிப்புகள் வெளியிடாமல் இருக்க துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுகளுக்கு உரிமை வழங்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இதே போன்று பல்வேறு மாநிலங்களும் அறிவித்து வருகிறது” என்றார். 


இந்த கல்வியாண்டில் முதல் தமிழ் வழியில் மொழி பாடங்களை பயிற்று விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, மும்மொழி கொள்கையை புகுத்துவதற்காக முயற்சியில் பாஜகவினர் ஈடுபடுபதாகவும், இருமொழிக்கொள்கையை ஆதரித்து ஒரு அறிக்கையை அண்ணாமலையை விட சொல்லுங்கள் அப்படி செய்தால் அவருக்கு தமிழ் மொழி மீது பற்று உள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இது தொடர்பாக நேருக்கு நேராக அண்ணாமலை விவாதிக்க தயாராக என பொன்முடி சவால் விடுத்தார். மேலும் பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது என்பதே அண்ணாமலைக்கு தெரியாது கர்நாடாகாவிலிருந்து இருந்து விட்டு வந்து அரசியல் செய்ய வேண்டுமென என்பதால் அவர் அரசியல் செய்து கொண்டருப்பதாகவும் ஊடகங்களில் வருவதை சரியாக புரிந்து கொள்ளாமல் வரலாற்றினையும் தெரிந்து கொள்ளாமல் அண்ணாமலை பேசி வருவதாக பொன்முடி கூறினார்.