ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்க ஏப்ரல் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.


2023 - 24 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


1. தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் ஆகும்.


2. RTE 25% இட ஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2022-23ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25%ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 18.04.2023 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை அன்றைய தினமே 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (intake) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 18.04.2023 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்படும்.


3. சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 20.04.2023 முதல் 18.05.2023 வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


4.20.04.2023 முதல் 18.05.2023 வரை முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்காண் அலுவலகங்களில் இணைய வசதி, கணினி, சான்றுகளை பதிவேற்றம் செய்ய தேவையான, Scanner வசதி, கணினி இயக்குபவர் ஆகியவற்றை 19.04.2023 அன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


5. அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், சார்ந்த பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு தவறாது வழங்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் பெற்று இணைய வழியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பிரதான நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை


மாணவர்கள் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும் வகையில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலில் (Main Gate) பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளிப் பெயர்க்கு அருகிலும், பொதுமக்கள் பெருமனயில் கூடும் இடங்களிலும் 6 × 10 அடி அளவில் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்டது போல் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும்.


7. RTE 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்படும் பள்ளிகள் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.


B. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை) சட்டம் 2009-ன்படி தனியர் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


9.தனியார் பள்ளிகள் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் பெற்றிருக்க வேண்டும்.


இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றி 2023 - 24ஆம் ஆண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.