டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம், ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்தத் தேர்வுகளில் கலந்துகொண்டு, எளிதாக வெற்றி பெற இலவசப் பயிற்சியை தமிழ்நாடு அரசே வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசின் கல்வி தொலைக்காட்சியில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.  


பாடப்பொருள்உள்ளுறைப்பயிற்சி


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ கல்வி தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. தினந்தோறும்‌ மாணவர்களுக்குப்‌ பாடப்பொருள்‌ உள்ளுறைப்‌ பயிற்சிகளை கல்வி தொலைக்காட்சி வழங்கி வருகிறது, அதேபோல தமிழ்நாடு அரசு தேர்வாணையப்‌ பணிகளுக்கான பயிற்சிகளையும்‌ அளிக்கிறது.


இந்த நிலையில் அரசின் கல்வி தொலைக்காட்சியில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.  


இந்த பாடங்கள் கிழமை வாரியாக அட்டவணை செய்யப்பட்டு ஒளிபரப்பட்டு வருகின்றன. குறிப்பாக இன்று (செப்.16) முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை ஒளிபரப்பப்பட உள்ளன.


தினசரி காலை 7 மணி முதல் 9 மணி வரை


மாலை 7 மணி முதல் 9 மணி வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளன.






யூடியூப் பக்கத்திலும் காணலாம்


https://www.youtube.com/@TNCareerServicesEmployment/featured எனும் போட்டித் தேர்வு வழிகாட்டி யூடியூப் பக்கத்தில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலிகளைக் காணலாம்.


https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தில் மென்பாடக் குறிப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


நான் முதல்வன் திட்டம்


தமிழ்நாடு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, யூபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி தொலைக்காட்சியிலும் யூடியூப் பக்கத்திலும் பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.youtube.com/@TNCareerServicesEmployment/videos