தமிழகத்தில் உள்ள சுமார் 31 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அரசுப் பள்ளிகளோடு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப் படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன்பெற உள்ளனர்.


இந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தமிழ்‌நாட்டில்‌ உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில்‌ படிக்கும்‌ ஏழைக்‌ சூழந்தைகளின்‌ படிப்பினை ஊக்குவிக்கவும்‌. ஊட்டச்சத்துக்‌ குறைபாட்டினைப் போக்கவும்‌. கற்றல்‌ இடைநிற்றலை தவிர்க்கவும்‌. முதலமைச்சர்‌ அறிவிப்பின்படி மாநகராட்‌ சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்‌ சி) மற்றும்‌ மலைப்‌ பகுதிகளில்‌ உள்ள 1545 அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ 1,14,095 தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும்‌ சத்தான சிற்றுண்டி வழங்கும்‌ நோக்கத்தில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது.


பின் கூடுதலாக 433 மாநகராட்சி, நகராட்சி அரசு நடுநிலை மற்றும்‌ உயர்நிலைப் பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ 56,160 மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டது.


முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ விரிவாக்கம்


பின்னர் தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து நகர்புறப் பகுதிகள்‌ (மாநகராட்சி, நகராட்சி/ பேரூராட்சி) மற்றும்‌ ஊரகப் பகுதிகளில்‌ செயல்படும்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவியரும்‌ பயனடையும்‌ வகையில்‌ 31,008 அரசுப்‌ பள்ளிகளில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டது.


முதலமைச்சரால் தமிழ்நாட்டில்‌ ஊரகப்‌ பகுதிகளில் இயங்கி வரும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மேலும்‌ சுமார்‌ 2 இலட்சத்து 50 ஆயிரம்‌ மாணவர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ வரும்‌ கல்வி ஆண்டு முதல்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ விரிவுபடுத்தப்படும்‌ என அறிவிக்கப்பட்டது.


எனவே வரும்‌ கல்வியாண்டில்‌ (2024- 2025) இத்திட்டம்‌ ஊரகப்பகுதிகளில்‌ செயல்படும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 1முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ , மாணவியருக்கு பயன்‌ பெறும்‌ நோக்கில்‌ விரிவுபடுத்தப்பட உள்ளது.


இந்நிலையில்‌ காலை உணவு வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டட அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ மதிய உணவு திட்‌டத்திற்கு வழங்கப்பட்டதுபோல்‌ இத்திட்டத்திற்கும்‌ அப்பள்ளியிலேயே தனியாக உணவுப்‌ பொருட்கள்‌ வைப்பதற்கும் சமையல்‌ செய்வதற்கும்‌ தேவையான இடவசதி அமைத்து கொடுப்பதற்கும்‌ இத்திட்டத்தை‌ முழுமையாகவும்‌ செம்மையாகவும்‌ செயல்படுத்துவதற்குத்‌ தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தாளாளர்‌, பள்ளித்‌ தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடவும்‌ அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்‌டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.


மாவட்டக்‌ கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய குழு


இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ தலைமையில்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து 1 வார காலத்திற்குள்‌ அப்பள்ளிகளை பார்வையிட்டு காலை உணவுத்‌ திட்டம்‌ அமல்படுத்துவதற்குத்‌ தேவையாக அனைத்து வசதிகளும்‌ இருப்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌.


மேலும்‌. மாவட்ட ஆட்‌சியர்‌ தலைமையில்‌ ஊரக வளர்ச்சி சமூக நலத்துறை மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை அலுவலர்களை இணைத்து ஆலோசனை கூட்டம்‌ நடத்தி மாவட்ட அளவில்‌ இத்திட்டத்தினை சிறப்பாகவும்‌. செம்மையாகவும்‌ செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.