பட்ஜெட் தாக்கல் அன்று உண்ணாவிரதப் போராட்டம்: டிட்டோஜேக் ஆசிரியர் அமைப்பு அறிவிப்பு

பிப்.19 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக, டிட்டோ ஜாக்‌ எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. 

Continues below advertisement

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்.19ஆம் தேதி அன்று, சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக, டிட்டோ ஜாக்‌ எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. 

Continues below advertisement

குழுவின் மாநில உயர்மட்டக்குழுக்‌ கூட்டம்‌ காணொளி வழியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோ ஜாக்‌ மாநில உயர் மட்டக்குழு உறுப்பினரும்‌, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளருமாகிய மன்றம்‌ நா.சண்முகநாதன்‌ ‌ தலைமை வகித்தார்‌.

கூட்டத்தில்‌ டிட்டோ ஜாக்‌ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்‌ கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். 

தீர்மானம்‌ எண்‌ : 1

தொடக்கக் கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ 90 சதவீத ஆசிரியர்களின்‌, குறிப்பாக பெண் ஆசிரியா்களின்‌ பதவி உயர்வு வாய்ப்பை‌ பறிக்கும்‌ வகையிலும்‌, தொடக்கக் கல்வித்துறையில்‌ 60 ஆண்டுகாலமாக நடைமுறையில்‌ இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி மாநில முன்னுரிமையைக்‌ கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கும்‌ மேற்பட்ட ஆசிரியார்களின்‌ பணி முன்னுரிமை மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிக்கும்‌ வகையிலும்‌ வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்‌ 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

12.10.2023 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ தலைமையில்‌, பள்ளிக்கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ தொடக்கக் கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ டிட்டோஜாக்‌ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன்‌ நடைபெற்ற பேச்சுவார்த்தையில்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள்‌ உட்பட அன்று

மூண்வைக்கப்பட்ட 50 அம்சக்‌ கோரிக்கைகள்‌ உள்ளிட்ட 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 19.02.2024 திங்கள்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 6 மணி முடிய சென்னை அண்ணா சாலையில்‌ உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின்‌ மாநில தலைமை அனுவலகம்‌ பின்புறம்‌ உள்ள காயிதே மில்லத்‌ மணிமண்டயம்‌ அருகில்‌ பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள்‌பங்கேற்கும்‌ மாநில அளவிலான மாபெரும்‌ உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்துவதென மாநில உயர் மட்டக்குழு ஏகமனதாகத்‌ தீர்மானிக்கிறது.

தீர்மானம்‌ எண்‌: 2

19.0.2024 வுன்று நடைபெறும்‌ டிட்டோ ஜாக்கின்‌ மாநில அளவிலான மாபெரும்‌ உண்ணாவிரத அறப்போராட்டத்தை டிட்டோஜாக்‌ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்‌ 12 பேரும்‌ கூட்டுத்‌ தலைமையேற்று நடத்துவதெனவும்‌, டிட்டோஜாக் இணைப்புச்‌ சங்கங்களின்‌ மாநில தலைவர்கள்‌ கூட்டாக முன்னிலை வகிப்பதெனவும்‌, டிட்டோஜாக் இணைப்புச்‌ சங்கங்களின்‌ மாநில பொருளாளா்கள்‌ கோரிக்கை விளக்கவுரை ஆற்றுவதெனவும்‌ மாநில உயர்மட்டக்குழு தீர்மானித்துள்ளது.

தீர்மானம்‌ எண்‌: 3

19.02.2024 அன்று நடைபெறும்‌ டிட்டோஜாக்கின்‌ மாநில அளவிலான மாபெரும்‌ உண்ணாவிரத அறப் போராட்டத்தில்‌ டிட்டோஜாக் சங்கங்களின்‌ சார்பில்‌ பெருவாரியான ஆசிரியர்களைப்‌ பங்கேற்கச்‌ செய்திட அந்தந்தச்‌ சங்கங்கள்‌ உரிய ஏற்பாடுகள்‌செய்திட வேண்டுமெனவும்‌, உண்ணாவிரத அறப் போராட்டத்தில்‌ பங்கேற்கும்‌ ஆசிரியா்கள்‌ தனிச்சங்க அடையாளங்களை வெளிப்படுத்தும்‌ வகையில்‌ கொடிகள்‌, பதாகைகள்‌, சின்னங்கள்‌உள்ளிட்ட எவற்றையும்‌ பயன்படுத்தக்‌ கூடாதெனவும்‌ மாநில உயர்மட்டக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்‌ எண்‌: 4

மாபெரும்‌ உண்ணாவிரத அறப் போராட்டத்தில்‌ பங்கேற்கும்‌ ஆசிரியர்கள்‌ தகுதியுள்ள விடுப்பை எடுத்துக்கொண்டு போராட்டக்‌ களத்திற்கு வர வேண்டுமனவும்‌, இறுதிவரை கட்டுப்பாட்டைக்‌ கடைபிடித்து போராட்டக் களத்தில்‌ நிற்க வேண்டும் எனவும்‌ மாநில உயர்மட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு டிட்டோஜாக் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola