தேர்வுகள் என்றாலே மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் தயாராக வேண்டிய சூழல் இப்போது இருக்கிறது. நன்றாகப் படித்து முன்கூட்டியே தயாராகி இருந்தாலும், தேர்வுக் காலத்தில் செய்யும் பொதுவான தவறுகள், மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நன்கு தயாரான மாணவர்களும் சிறிய தவறுகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்.

Continues below advertisement

இந்த பிழைகள் என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால், அவற்றில் பெரும்பாலானவற்றை எளிதாகத் தவிர்க்கலாம். 

தேர்வுகள் நீங்கள் படித்ததைப் பற்றியது மட்டுமல்ல, அழுத்தத்தின் கீழ் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதையும் பற்றியது. சில பொதுவான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம், கூடுதல் நேரம் படிக்காமல் உங்கள் மதிப்பெண்களை மேம்படுத்தலாம். இங்கே சில பொதுவான தேர்வு தவறுகள் மற்றும் அவற்றை நீங்கள் எப்படி சரிசெய்வது என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கேள்வியை சரியாகப் படிக்காதது

பல மாணவர்கள் கேள்விகளை அவசரமாகப் படித்து, "இல்லை (NOT)," "விளக்குங்கள் (Explain)" அல்லது "ஒப்பிடுங்கள் (Compare)" போன்ற முக்கிய வார்த்தைகளைத் தவற விடுகிறார்கள்.

என்ன செய்யலாம்?

ஒவ்வொரு கேள்வியையும் இரண்டு முறை படிக்க சில வினாடிகள் ஒதுக்குங்கள். நீங்கள் பதிலளிக்கத் தொடங்குவதற்கு முன் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டுக் காட்டவும் அல்லது ஹைலைட் செய்யவும்.

மோசமான நேர மேலாண்மை

ஒரு கேள்விக்கு அதிக நேரம் செலவிடுவது மற்ற கேள்விகளுக்கு போதிய நேரத்தை அளிக்காது, அவற்றை அவசரமாக செய்ய வைக்கும்.

என்ன செய்யலாம்?

மதிப்பெண்களின் அடிப்படையில் உங்கள் நேரத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, 10 மதிப்பெண் கேள்விக்கு 2மதிப்பெண் கேள்வியை விட அதிக நேரம் தேவை. தேர்வை எழுத எழுத, நேரத்தை சரிபார்த்துக் கொண்டே இருங்கள்.

பதில்களை எழுதாமல் விடுதல்

சில மாணவர்கள் கடினமான கேள்விகளைத் தவிர்த்துவிட்டு, பின்னர் அவற்றுக்கு பதிலளிக்க மறந்துவிடுகிறார்கள்.

என்ன செய்யலாம்?

உங்களுக்கு உடனடியாக பதில் தெரியவில்லை என்றால், அதை மார்க் செய்து வைத்துக்கொண்டு, அடுத்த கேள்விக்கு செல்லுங்கள். எளிதான கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, திரும்பி வந்து எழுத முயற்சிக்கலாம்.

மோசமான அல்லது தெளிவற்ற எழுத்து

உங்கள் பதில்கள் சரியாக இருந்தாலும், மோசமான கையெழுத்து அல்லது தெளிவற்ற வரைபடங்கள், திருத்தும் ஆசிரியர்கள் அதைப் படிக்க கடினமாக்கும்.

என்ன செய்யலாம்?

நேர்த்தியாக எழுதுங்கள், பதில்களுக்கு இடையில் இடைவெளி விடுங்கள், மேலும் உங்கள் பதில்களைத் தெளிவாகக் காட்ட தலைப்புகள் அல்லது புல்லட் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.

கேள்வி நெறிமுறைகளை புறக்கணித்தல்

சில சமயங்களில், கேள்விகளில் "பாயிண்ட்டாக எழுதுங்கள்," "உதாரணங்களுடன் விளக்குகள் " அல்லது "30 வார்த்தைகளில் பதிலளிக்கவும்" போன்ற குறிப்பிட்ட வழிமுறைகள் இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

கேட்ட கேள்வியை சரியாக உள்வாங்குங்கள். தவறான பதில்களுக்காக அல்லாமல், வழிமுறைகளைப் பின்பற்றாததற்காக மதிப்பெண்கள் பெரும்பாலும் குறைக்கப்படுகின்றன.

மீண்டும் சரிபார்க்க மறப்பது

பல மாணவர்கள், தேர்வை சீக்கிரமாக முடித்துவிட்டாலும், தங்கள் தாளை மீண்டும் சரிபார்ப்பதில்லை. சிறிய எழுத்துப்பிழை, இலக்கணம் அல்லது கணக்கீட்டு பிழைகள் மதிப்பெண்களை இழக்க வைத்துவிடும்.

உங்கள் பதில்களை மதிப்பாய்வு செய்ய எப்போதும் 5-10 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.

கடந்தகால தாள்களை போதுமான அளவு பயிற்சி செய்யாதது

குறிப்புகளை மட்டும் படிப்பது போதாது. தேர்வு வடிவத்தில் பதிலளிக்க நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

மன அழுத்தம் அல்லது சோர்வடைதல்

தேர்வுகளின்போது பதட்டம் அடைவது, நீங்கள் படித்ததை மறந்துவிடச் செய்யலாம்.

என்ன செய்யலாம்?

ஆழ்ந்த மூச்சு விடுங்கள், அமைதியாக இருங்கள், மேலும் ஒரு நேரத்தில் ஒரு கேள்வியில் கவனம் செலுத்துங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

ஆல் தி பெஸ்ட்!