தமிழ்நாடு அரசு - சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு சார்பில்‌ தந்‌தை பெரியார்‌ பிறந்த நாள்‌ செப்டம்பர் 17 சமூகநீதி நாள்‌ கொண்டாட்டம்‌ நடைபெற உள்ளது. இதன்படி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே தமிழ்க்‌ கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் அளிக்கப்பட உள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு - சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு கூறி உள்ளதாவது:


எதிர் வரும்‌ சமூக நீதி நாளான செப்டம்பர்‌ 17-ஆம்‌ தேதியை, சிறப்பாக கொண்டாடும்‌  நோக்கிலும்‌, கல்லூரி மாணவர்களுக்கு இடையே சமூக நீதியை நிலை நிறுத்தவும்‌, சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையிலும்‌ தமிழ்க்‌ கட்டுரை போட்டி நடத்த தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.


இதன்படி, அரசு கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ பயின்று வரும்‌மாணவர்களுக்கு கீழ்காணும்‌ ஏதேனும்‌ ஒரு தலைப்பில்‌ தமிழ்‌ மொழியில்‌ 1,000 (ஆயிரம்‌) சொற்களுக்கு மிகாமல்‌ தமிழ்க்‌ கட்டுரை போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கட்டுரை போட்டி தலைப்பு பின்வருமாறு:



  1. தந்‌தை பெரியாரும்‌ சமூக நீதியும்‌

  2. சாதி ஒழிப்பே சமூக விடுதலை

  3. பாலினச்‌ சமத்துவம்‌


அரசு கல்லூரி மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ பயின்று வரும்‌ மாணவர்கள்‌ மேலே படிக்கப்பட்ட ஏதேனும்‌ ஒரு தலைப்பின்‌ கீழ்‌ 12.09.2024 தேதிக்கு முன்‌ அஞ்சல்‌ வழி மூலமாகவோ அல்லது மின்‌ அஞ்சல்‌ மூலமாகவோ (ஏதேனும்‌ ஒரு வழி மூலமாக மட்டும்‌) கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கட்டுரைகளை அனுப்பிட கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.


ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு


ஒரு மாணவர்‌ ஒரு தலைப்பின்‌ கீழ்‌ மட்டுமே கட்டுரை அனுப்ப வேண்டும்‌. கட்டுரையுடன்‌ மாணவரது கல்லூரி அடையாள அட்டை மற்றும்‌ ஆதார்‌ அட்டை நகல்‌ இணைக்கப்பட வேண்டும்‌. இவ்வாறு பெறப்படும்‌ கட்டுரைகள்‌ சீராய்வுக் குழு மூலம்‌ பரிசீலித்து, தேர்வு செய்யப்படும்‌ முதல்‌ 5 கட்டுரைகளுக்கு பரிசுத்‌ தொகை வழங்கப்படும்‌.


பரிசு பெற தகுதியான சிறப்பான கட்டுரைகளை தேர்ந்தெடுத்து 11 கட்டுரைகளுக்கு வழங்கப்படும்‌ பரிசுத்‌ தொகை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


முதல்பரிசு ஒருவருக்கு- ரூ.1 லட்சம்


இரண்டாம் பரிசு - 2 பேருக்கு - தலா ரூ. 50,000


மூன்றாம் பரிசு – 3 பேருக்கு- தலா ரூ. 25,000


ஆறுதல் பரிசு - 5 பேருக்கு- தலா ரூ. 10,000


அனுப்ப வேண்டிய கடைசிநாள்‌: 12.09.2024


கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:-


தலைவர்‌, சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு, எண்‌.735, 2ஆம்‌ தளம்‌,


தேவ நேயப்‌ பாவாணர்‌ நூலக கட்டிடம்‌,


அண்ணா சாலை, சென்னை- 600002


அல்லது: மின்னஞ்சல்‌ முகவரி:- sjmc.srds@tn.gov.in


இந்த செய்தி சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு தலைவர்‌ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு அனைத்து அரசுக்‌ கல்லூரி முதல்வர்கள்‌, பல்கலைக்‌ கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.