தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகலில் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. குறிப்பாக, 18.08.2025 முதல் 22.08.2025 வரை தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதை எழுதிய தனித் தேர்வர்களுக்கு 17.09.2025 அன்று, அதாவது நாளை பிற்பகலில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.
அதில், Notification என்ற Icon Click செய்யவும்.
அதில் ESLC (Private Appearance) Examination στ & ESLC Result AUG 2025 Click செய்ய வேண்டும்.
திறக்கப்படும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை (DD/ MM/ YYYY) பதிவு செய்ய வேண்டும்.
அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. (No Minimum educational Qualification)
அதேபோல அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8ஆம் வகுப்பிற்கும் கீழ் படித்து இடையில் நின்ற 12 1/2 வயது பூர்த்தி அடைந்தவர்களும் இத்தேர்வை தனித்தேர்வராக விண்ணப்பித்து எழுதலாம் என்று குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/