தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில்( National diaster management authority)  senior Research officer மற்றும் assistant advisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஆணையமாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்பட்டுவருகிறது. கடந்த 1995 முதல் 2005 வரை இந்நிறுவனம் தேசியப் பேரிடர் மேலாண்மை மையம் என்ற பெயரில் இயங்கியது. பிறகு 2005 ல் பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றிய பிறகு, 2006-இல் தேசியப்பேரிடர் மேலாண்மை ஆணையம்  எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கிவருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் பேரிடர் காலங்களில் தணிப்பு நடவடிக்கைகளுக்கும், ஆயுத்த நிலை ஏற்பாடுகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும் மற்ற நாடுகளில் ஏற்படும் பேரிடர் நிகழ்வுகளின் போது தேசிய அளவிலான உதவிகளை முடிவெடுத்து வழங்கும் பணிகளிலும் இவ்வாணையம் செயல்பட்டுவருகிறது. இந்த தேசிய பேரிடர் ஆணையத்தின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டுவரும் நிலையில், தற்பொழுது senior Research officer மற்றும் assistant advisor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Assistant Advisor  பணியிடங்களுக்கு Computer Science அல்லது Electronics அல்லது Information Technology அல்லது Telecommunications பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சிSenior Research Officer – Master of Art அல்லது Master of Science அல்லது Bachelor of Veterinary அல்லது Bachelor of Medicine and Bachelor of Surgery அல்லது Bachelor of Technology அல்லது Bachelor of Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், Senior Research office பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முதுகலை அறிவியல், Bachelor of Veterinary அல்லது Bachelor of Medicine மற்றும் Bachelor of Surgery or Bachelor of Technology போன்ற கல்வித்தகுதிகளைப்பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட தகுதியும், கல்வியறிவும் உள்ளவர்கள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள 45 நாட்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 67 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதோடு இந்த  வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான கூடுதல் விபரங்களை https://ndma.gov.in/sites/default/files/PDF/Jobs/advt_aait_4sro_june21.pdf  என்ற பக்கத்தில் தெரிந்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.