தமிழகம் முழுவதும்  மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 


அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1,02,400 ஆண் வாக்காளர்களும், 1,11,904 பெண் வாக்காளர்களும் 7 இதர வாக்காளர்களும், மொத்தம் 2,14,311 வாக்காளர்கள் உள்ளனர்.


கரூர் சட்டமன்ற தொகுதியில் 1,16,004 ஆண் வாக்காளர்களும், 1,28,904 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் மொத்தம் 2,44,928 வாக்காளர்களும் உள்ளனர்


கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,03,935 ஆண் வாக்காளர்களும், 1,09,139 பெண் வாக்காளர்களும், 43 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,13,117 வாக்காளர்களும் உள்ளனர்


குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1,10,672 ஆண் வாக்காளர்களும், 1,16,584 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,27,266 வாக்காளர்களும் உள்ளனர். 


4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4,33,011 ஆண் வாக்காளர்களும், 4,66,531 பெண் வாக்காளர்களும், 80 இதர வாக்காளர்களும் என் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,99,622 வாக்காளர்கள் உள்ளனர்.




மேலும், 134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், 253 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும், 135-கரூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடி மையங்களும், 95 வாக்குச்சாவடி அமைவிடங்களும், 136-கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 258 வாக்குச்சாவடி மையங்களும், 201 வாக்குச்சாவடி அமைவிடங்களும், 137-குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடி மையங்களும், 163 வாக்குச்சாவடி அமைவிடங்களும், ஆக மொத்தம் 1,045 வாக்குச்சாவடி மையங்களும், 619 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. 




பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சாpயாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், கரூர் மாநகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக 23.12.2019 முதல் 22.01.2020 வரை வைக்கப்படவுள்ளன.
மேலும் 01.01.2022 அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.  01.11.2021 முதல் 30.11.2021 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்.  




எதிர்வரும் 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவை குறித்த மனுக்களை அளிக்கலாம். மேலும், http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் voter helpline என்ற மொமைபல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். எனவே, தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.