Puducherry school leave ; 'டிட்வா' புயல் காரணமாக, நாளை 01.12.2025 புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை  



'டிட்வா' புயல் காரணமாக, அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் நாளை (01/12/25) திங்கள்கிழமை புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


டிட்வா புயல் எங்கே மையம் கொண்டுள்ளது?


வானிலை மையம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையின்படி, “தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 05 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 29, 2025 அன்று 2330 மணி இந்திய நேரப்படி மையம் கொண்டு, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில், அட்சரேகை 10.7°N மற்றும் தீர்க்கரேகை 80.6°E க்கு அருகில், வேதாரண்யத்தில் (இந்தியா) இருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 90 கிமீ, காரைக்காலில் (இந்தியா) இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 90 கிமீ, யாழ்ப்பாணத்தில் (இலங்கை) இருந்து வட-வடகிழக்கில் 130 கிமீ, புதுச்சேரியில் (இந்தியா) இருந்து தென்-தென்கிழக்கில் 160 கிமீ மற்றும் சென்னைக்கு (இந்தியா) தெற்கே 260 கிமீ தொலைவில் டிட்வா மையம் கொண்டுள்ளது.

Continues below advertisement


அடுத்த 24 மணி நேரத்தில் இது வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. வடக்கு நோக்கி நகரும் போது, ​​சூறாவளி புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று (நவம்பர் 30) ​​அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முறையே தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்சம் 50 கிமீ மற்றும் 25 கிமீ தூரத்திற்குள் மையம் கொண்டிருக்கும்.




புயல் எப்போது? கரையை கடக்கும்..


டிட்வா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து இன்று மாலை புயல் வலுவிழக்கும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


அதிகாலை மிக கனமழைக்கான வாய்ப்பு:


தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை 8.30 மணி வரை கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி & கன்னியாகுமரி, மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


தமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகள்:


இன்று காலை வரை:சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு. 01-12-2025 காலை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர். வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்


30-11-2025 காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01-12-2025 காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.