பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையான இஷா தல்வார் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தில்லு முல்லு, மீண்டும் ஒரு காதல் கதை, ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிச்சயமானவர். ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார் இஷா தல்வார். மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள இஷா தல்வார் தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர். 2012ல் மலையாளத்தில் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே விருதுகளை குவித்தார். தற்போது இஷா தல்வார் ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ என்ற இந்தி இணைய தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இஷா தல்வார் கண்ணில் பலத்த காயம் :
அந்த வகையில் ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ தொடரின் படப்பிடிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக விபத்து நேர்ந்துள்ளது. தற்போது இந்த தொடரின் ஆக்ஷன் காட்சிகள் உப்பளத்தில் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் ஷூட்டிங் நடைபெற்றதால் ஒரே இருட்டாக இருந்ததால் வெடிபொருட்கள் இருந்த இடம் தெரியவில்லை. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்ததில் இஷா தல்வார் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கண்கள் திறக்க முடியாமல் வலியால் துடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மூன்று நாட்கள் கண்கள் திறக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறித்தியதால் கண்களை திறக்காமல் இருளில் இருந்தேன். மருத்துவர்களின் சிகிச்சையால் தான் விரைவில் குணமடைந்து காயம் முழுமையாக சரியான பிறகு தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார் நடிகை இஷா தல்வார்.
இயக்குநர் ஹோமி இயக்கத்தில் 'சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ' வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மே 5ம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. டிம்பிள் கபாடியா, அங்கிரா தார், ராதிகா மதன், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.