தமிழகத்தில் உள்ள 6 அரசு மருத்து கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனமித்து மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றிய 6 பேராசிரியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக இருந்த நாராயணசாமி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனர் திருப்பதி கடலூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றனர். திருச்சி மருத்துவ கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வராகவும், பெரம்பலூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவ கல்லூரிக்கும், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

 



 


பி.ஆர்க் தரவரிசை பட்டியல் வெளியீடு - 8ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

 

இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பொதுப் பிரிவினருக்கான 2வது சுற்று கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடக்கிறது. இந்த நிலையில் பி.ஆர்க். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது.

 

மொத்தம் 38 கல்லூரிகளில் உள்ள 1,609 இடங்களுக்கு இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 2 ஆயிரத்து 491 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த நிலையில், அவர்களில் பொதுப்பிரிவில் 1,607 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 3 பேரும், விளையாட்டுப்பிரிவில் 22 பேரும், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் 18 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் ஒருவரும் தகுதியானவர்களாக கருதப்பட்டு, அவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 

இதில் ஏதும் குறைகள் இருக்கும்பட்சத்தில், மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மாணவர் சேர்க்கை சேவை மையத்தை அணுகலாம். இதற்கு 6 மற்றும் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு 8ம் தேதி தொடங்குகிறது. 8ம் தேதியன்று சிறப்பு பிரிவினருக்கும், அதன்பின்னர், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 9ம் தேதி முதலும் தொடங்கி நடைபெற உள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.