தீபாவளி , பொங்கல் , தசரா என பண்டிகை நாட்களை குறிவைத்து ஒவ்வொரு ஆண்டும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் விழாக்கால சலுகைகளை அறிவிப்பது வழக்கம் . அந்த வகையில் சமீபத்தில் ஃபிளிப்கார் இணையதளத்தில் பிக் பில்லியன் ஆஃபரில் ஆடை முதல் எலெக்ட்ரானிக் பொருட்கள் வரையிலும் பல தள்ளுபடிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் சிறப்பான ஆஃபராகவும் , பலரையும் கவர்ந்த ஆஃபர்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது ஐபோன் 13 மாடல்களின் விலை தள்ளுபடிதான். ஐபோன் 13 ரூ. 50,000 என ஃபிளிப்கார் அறிவித்ததை அடுத்து பலரும் தங்களது ஆடரை குவிக்க துவங்கிவிட்டனர். அங்குதான் ஃபிளிப்கார்டிற்கு சிக்கல் , ஏனென்றால் லிமிட்டட் ஆஃபரான ஐபோன் 13 மாடலை , ஆடர் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுப்பதில் சிக்கல் எழுந்துவிட்டது. இதனையடுத்து ஐபோனை ஆடர் செய்த பலருக்கும் , அது ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வர தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல ஆஃபரில் விற்கப்பட்ட பல பொருட்களின் ஆடர்களையும் ஃபிளிப்கார்ட் ரத்து செய்துள்ளது.
இதனால் ஆத்திர்மடைந்த வாடிக்கையாளர்கள் , ஃபிளிப்கார்ட்டின் செயலை சுட்டிக்காட்டி ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்பட்டுத்தி வருகின்றனர்.