பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


அதேபோல் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக முனைவர் ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக முனைவர் மு.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலராக பெ.குப்புசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.