தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சின்னாங்குப்பம் தனியார் பள்ளியில் தமிழ்நாடு அழகு மாறுதல் மற்றும் ஈர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மூதுரை கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


இந்தக் கூட்டத்தில், தொடக்க கல்வித் துறையில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஆசிரியர்களுடைய முன்னுரிமையை பாதுகாத்து, தொடக்க கல்வித் துறையில் வரலாற்று சிறப்புமிக்க அரசானை 243 வெளியிடப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்,  பள்ளிக் கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகளையும், பாட அசிரியர்கள் தமிழக அரசு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்ய இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு, ஏறக்குறைய 10,000, 12,000 ஆசிரியர்கள் பணி ஈர்ப்பு முறையில், ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களாக, துறை மாறுதல் ஆசிரியராக சென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வின் அடிப்படையில், அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.  சீனியாரிட்டியை, அடுத்த அனைத்து பதவி உயர்வுகளுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே ஒரு கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து இந்த தீர்மானத்தை ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமாரிடம் வழங்கினர். 


இதனை தொடர்ந்து பேசிய ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், 


ஆசிரியர்கள் நடத்துகின்ற மாநாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு முன்பே, ஆசிரியர்களின் இந்த ஒற்றைக் கோரிக்கை குறித்து, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்துவிட்டு தான் வந்தேன். இங்கு வந்த பிறகு இந்த கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புகைப்படம் எடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு தெரிவித்திருக்கிறேன்.  நிச்சயமாக ஆசிரியர்களின் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என நம்பலாம். அதனை நிச்சயமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செய்து கொடுப்பார் என தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலாளர் பேட்டரக், தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ் முருகன் குமார் சுப்பிரமணி ஸ்ரீதர் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் செயலாளர் பேட்டரிக், தமிழ்நாட்டினுடைய பள்ளிக் கல்வித் துறையானது கோரிக்கைகளை அழைத்து கேட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடைய நிதி சாராத பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக சரி செய்து தருவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இன்றைக்கு தொடக்க கல்வித் துறையில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஆசிரியர்களுடைய முன்னுரிமை பாதுகாத்து, தொடக்க கல்வித் துறையில் வரலாற்று சிறப்புமிக்க அரசானை 243 வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு, ஏறக்குறைய 10,000, 12,000  ஆசிரியர்கள் பணி ஈர்ப்பு முறையில், ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களாக, துறை மாறுதல் ஆசிரியராக சென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வின் அடிப்படையில், அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.  சீனியாரிட்டியை, அடுத்த அனைத்து பதவி உயர்வுகளுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே ஒரு கோரிக்கை தான். இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும், பள்ளிக் கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகளையும், பாட அசிரியர்கள் தமிழக அரசு பாராட்டு தெரிவித்து, சிறப்பு செய்ய இருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த மாநாட்டில், இந்த கூட்டத்தை நாங்கள் நடத்தி இருக்கிறோம்.


தமிழக அரசு எங்களுடைய 19 ஆண்டு கால கோரிக்கையை, நாங்கள் நிதி சார்ந்த எந்த கோரிக்கையை கேட்கவில்லை. ஒரே ஒரு கோரிக்கை, எங்களுடைய சீனியார்ட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு வந்த சீனியாரிட்டியை எடுத்துக் கொள்ளாமல், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றிய பணி காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். தமிழக அரசு விரைவில் இந்த கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இதனால் ஏறக்குறைய 10,000 முதல் 12000 ஆசிரியர்கள் இந்த கோரிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அரசுக்கு எந்த நிதி இழப்பும் இல்லை.  இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை விரைவில் சரி செய்து, இந்த கலந்து ஆய்வில், அனைவருடைய முன்னுரிமை பாதிக்காத வகையில் பதவி உயர்வு பெறுவதற்கு வழி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என பேட்ரிக் தெரிவித்தார்.