தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் உயர்கல்வி பயிலும் 220 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.13 கோடியே 83 லட்சம் கல்வி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.


தமிழக அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் கல்வி பெற்று முன்னேற்றம் அடைவதற்கும் அவர்கள் குடும்ப பொருளாதார வளர்ச்சி அடைவதற்காகவும் அவசியமாவதால் கல்வி கடனுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 


தமிழக அரசு மாணவர்களுக்கு கொடுத்த தமிழ் புதல்வன் திட்டம்


பிளஸ் 2  முடிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் கல்லூரிகளுக்கு கள ஆய்வு அழைத்துச் செல்லுதல் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அரசின் புதுமைப்பெண் திட்டம் மாணவர்களுக்கு தமிழ் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் உதவித்தொகை ₹1000 வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. 


மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளது


இதனால் மாணவர்கள் உயர்கல்வி ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகளில் கல்விக் கடன்கள் வழங்கி வருகிறது. மாணவர்களின் கல்லூரி கனவே நினைவாக்கிட எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக வித்யா லட்சுமி குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து கல்வி கடன் வழங்கும் முகாம் நேற்று நல்லம்பள்ளி விஜய் வித்யாலயா கல்லூரியில் நடந்தது.



மாவட்ட ஆட்சியர் சாந்தி முகாமை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் உதவி வழங்கி பேசியதாவது:-


தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2023- 2024 ஆம் ஆண்டில்,1009 மாணவர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலமாக ₹23 கோடி கல்வி கடனாக வழங்கப்பட்டுள்ளது.


2024-2025 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு,1,568 பேருக்கு சுமார் 22.44 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1.4.2024 முதல் 30.6.2024 வரை 121 பேருக்கு சுமார் ₹6கோடியே 23 லட்சமும் 1.7.2024 முதல் தற்போது வரை 77 பேருக்கு₹5 கோடியே 11 லட்சமும் கல்வி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 


இன்றைய முகாமில், 22 மாணவர்களுக்கு₹2 கோடியே 67 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டில் இதுவரை மொத்தம் 220 மாணவர்களுக்கு ₹13 கோடியே 83 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கல்வி கடனின் வட்டி தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம் கடன் சுமையை குறைக்கலாம் மேலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதன் திட்டங்களில் மூலம்  மாணவர்கள் தங்கள் கல்வி கனவை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாது எதிர்கால உயர்வான வாழ்வில் காண அடித்தளமாகவும் அமையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்  பால் பிரின்சி ராஜ் குமார், துணை கலெக்டர்கள் பயிற்சி சவுந்தர்யா, கார்த்திகா மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் பிரசன்னா பாலமுருகன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம ஜெயம் நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், விஜய் வித்யாலயா கல்லூரி முதல்வர் பாலசுந்தரம் வங்கியாளர்கள் அரசு அலுவலர்கள் கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.