தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை புதன்கிழமை முதல் தொடங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, ஆகியவற்றை நாளை மறுநாள் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். 


இந்நிலையில், வரும் 13ஆம் தேதி அதாவது புதன் கிழமை முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பினருக்கும் 11ஆம் வகுப்பு மாண்வர்களுக்கும் காலை 9.30 மணி முதல் தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறவுள்ளது. அதேபோல் 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மற்றும்  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வானது மதியம் 1.15 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.