இளங்கலை படிப்புகளில் சேர நடத்தப்படும் கியூட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 5 பாடங்களில் அதிகபட்ச NTA மதிப்பெண் பெற்ற டாப் 20 மாணவர்களின் விவரங்களை அறியலாம்.

Continues below advertisement

நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

11.64 லட்சம் பேர் எழுதிய தேர்வு

க்யூட் தேர்வை எழுத 15.68 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், 11.64 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர். மே 11 முதல் 31ஆம் தேதி வரையிலும் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் க்யூட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.

Continues below advertisement

35 ஷிஃப்ட்டுகளில் 321 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டாப் 20 மாணவர்கள்

இந்த ஆண்டு வெளியான முடிவுகளில், ஐந்து முக்கியப் பாடங்களில் தேசிய அளவில் 20 மாணவர்கள் அதிகபட்ச NTA மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

அறிவியல், கலை மற்றும் வணிகவியல் என பல்வேறு பிரிவுகளில் இருந்து தேர்வெழுதிய இந்த 20 மாணவர்கள், ஐந்து பாடங்களிலும் தங்களின் தனித்துவமான திறனை வெளிப்படுத்தி தேசிய அளவிலான தரவரிசையில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களின் விரிவான விவரங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை NTA வெளியிட்டுள்ளது.

  1. 263510269243 - 1232.19
  2. 263510280526 - 1230.82
  3. 263510250636 - 1207.21
  4. 263510857590 - 1205.96
  5. 263510690773 - 1203.78
  6. 263510166320 - 1202.15
  7. 263510282507 - 1201.71
  8. 263510435802 - 1197.54
  9. 263510364596 - 1188.97
  10. 263510097074 - 1188.03
  11. 263510169655 - 1186.56
  12. 263511025556 - 1186.30
  13. 263510642106 - 1184.34
  14. 263510957952 - 1182.74
  15. 263510169135 - 1182.02
  16. 263510150578 - 1181.18
  17. 263510036813 - 1181.13
  18. 263510540260 - 1180.91
  19. 263510165473 - 1180.10
  20. 2635510531257 - 1177.65

அதேபோல 22 மாணவர்கள், 3 பாடங்களில் 100 பர்சண்டைல் பெற்றுள்ளனர். 180 பேர் இரண்டு பாடங்களிலும் 3,214 பேர் ஒரு பாடத்திலும் 100 பர்சண்டைல் பெற்றுள்ளனர்.

இந்த டாப் 20 சாதனையாளர்கள் டெல்லி பல்கலைக்கழகம் (DU), ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும்.

மதிப்பெண் அட்டை

தேர்வெழுதிய பிற மாணவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ NTA மதிப்பெண் அட்டையை க்யூட் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பங்கேற்பு பல்கலைக்கழகங்கள் விரைவில் தங்களின் கட்-ஆஃப் மதிப்பெண்களை வெளியிட்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் கவுன்சிலிங் செயல்முறைகளைத் தொடங்க உள்ளன.