நாட்டின் முன்னணி மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) நடத்தப்பட்டு வருகிறது. இந்த க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்ரவரி 4) கடைசித் தேதி ஆகும்.

Continues below advertisement

எனினும் விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 7ஆம் தேதி வரை  செலுத்தலாம். அதேபோல பிப்.9 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்டெப் 1: தேர்வர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cuet.nta.nic.in-ஐப் பார்வையிடவும்.

Continues below advertisement

ஸ்டெப் 2: முகப்புப் பக்கத்தில் "New registration" என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் அனைத்து தகவல்களையும் உள்ளிடவும்.

ஸ்டெப் 3: உள்நுழைவுத் தகவலைச் சேர்க்கவும்.

ஸ்டெப் 4: அதன் பிறகு, உங்கள் கல்விப் பின்னணி, தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகம், பாடங்கள், படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.

ஸ்டெப் 5: அதன் பிறகு, உங்கள் கையொப்பம் மற்றும் புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைச் சேர்க்கவும்.

ஸ்டெப் 6: பரிவர்த்தனையை முடிக்க விண்ணப்பப் கட்டணத்தைச் செலுத்தவும்.

ஸ்டெப் 7: உங்கள் பதிவுகளுக்காக விண்ணப்பத்தைப் பதிவிறக்கி வைத்துக் கொள்ளவும்.

பாடத்திட்டம்

CUET பாடத்திட்டம் பெரும்பாலும் 12ஆம் வகுப்பு என்சிஇஆர்டி புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. க்யூட் வினாத்தாள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு மொழி தேர்வாகவும் இரண்டாவது பிரிவு பாடங்களுக்கான தேர்வாகவும் மூன்றாவது பிரிவு பொது திறனுக்கான தேர்வாகவும் இருக்கும்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் தோராயமாக 50 MCQ அடிப்படையிலான கேள்விகள் உள்ளன. 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/