நாடு முழுவதும் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 4) வெளியாகி உள்ளன. இறுதி விடைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த முடிவுகள் அமைய உள்ளன. சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகளை மாணவர்கள் cuet.nta.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மே 13 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்வு
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கான தேர்வு (CUET UG 2025) மே 13 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற்றது. காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மதியம் 3 முதல் 6 மணி வரையும் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.nta.nic.in என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் தோன்றும் "CUET UG 2025 Result" என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
- திரையில் புதிய பக்கம் தோன்றும்.
- அதில் லாகின் விவரங்களை உள்ளீடு செய்யவும். அல்லது https://examinationservices.nic.in/resultservices/CUET2025/Login என்ற இணைப்பை நேரடியாக க்ளிக் செய்யவும்.
- திரையில் தோன்றும் முடிவுகளை எடுத்து, சேமித்து வைத்துக் கொள்ளவும்.