மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சம் தகவல் தெரிவித்துள்ளது.


மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் நோக்கில்,  2023-ல் இருந்து ஆண்டுக்கு 2 முறை பொது நுழைவுத் தேர்வு Common University Entrance Test (CUET) நடத்தப்படும் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை( National Testing Agency (NTA)) விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இரு தேர்வையும் 45 நாட்கள் இடைவெளியில் எழுதலாம். இதனால் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது வாய்ப்பு மூலம் மதிப்பெண்ணை உயத்திக்கொள்ளவும் முடியும்.


மேலும், ஒவ்வோரு ஆண்டும் வினாத்தாள் பேட்டன் மாற்றப்படும் என்றும், 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இருந்தே CUET தேர்வுக்குக் கேள்விகள் கேட்கப்படும். 11-ஆம் வகுப்பில் இருந்து கேள்விகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்படுள்ளது.


இளங்கலை கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) என்ற திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. அனைத்துக் கல்வி வாரியங்களையும் சார்ந்த, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்தாண்டு பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணபிக்க கடைசி தேதி மே 6- ஆம் தேதி என்பது நீட்டிக்கப்படும் என்றும், முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமையின் உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்


ஜே.இ.இ. (Main) தேர்வில் நடைமுறையில் உள்ளது போலவே, மாணவர்கள் முதலில் எழுதிய தேர்வு முடிவுகளிலோ, மதிப்பெண்ணிலோ திருப்தி இல்லை என்றால், மீண்டும் ஒரு முறை தேர்வு எழுதலாம். அதிக மதிப்பெண் பெறுவதற்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று என்.டி.ஏ. தெரிவித்திருக்கிறது.


மேலும், முதல் பொது நுழைவுத் தேர்வு CUET மே மாதத்தின் இறுதி வாரத்திலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறும். இந்தாண்டு ஜூலை மாத்தில் நடக்க இருக்கும் CUET தேர்விற்கு விண்ணப்பங்கள் சுமார் 10 லட்சங்கள் வரை வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே, 06, 2022


விண்ணப்பிக்க https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


கூடுதல் விவரங்களுக்கு:  https://nta.ac.in/Download/Notice/Notice_20220327205829.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கவும்.