CUET PG Exam 2024: மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்.7) கடைசி ஆகும். தனியார் கல்வி நிறுவனங்களும் தற்போது க்யூட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.


அது என்ன க்யூட் தேர்வு?


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் மாநிலப் பல்கலைக்கழகங்களும் தனியார் பல்கலைக்கழகங்களும் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே தற்போது வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் முதுகலை படிப்புக்கான க்யூட் நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை. அதேநேரத்தில் சேர்க்கை நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த முறை 142 பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வில் பங்கேற்றன. டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐஐடி லக்னோ, ஐஐடிடிஎம், டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்கின்றன. தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (Rajiv Gandhi National Institute of Youth Development) ஆகியவை க்யூட் மதிப்பெண்களைக் கொண்ட மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.


தேர்வு எப்போது?


இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) மார்ச் மாதம் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும். பிப்ரவரி 9 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். தேர்வு மையங்கள் குறித்த விவரம் மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வை நடத்தும் என்டிஏ தெரிவித்துள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.


தேர்வு முறை


ஒவ்வொரு தேர்வரும் அதிகபட்சம் நான்கு தாள்களை எழுதலாம். 105 நிமிடங்களுக்குத் தேர்வு நடைபெறும்.  ஒவ்வொரு கேள்வித் தாளும் 75 கேள்விகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான மதிப்பெண்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. அதாவது ஒரு மதிப்பெண் கழித்துக் கொள்ளப்படும். மொழித் தாள்கள் அந்தந்த மொழிகளிலேயே இருக்கும். 3 ஷிஃப்டுகளில் தேர்வு நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்



தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 


* CUET registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அல்லது https://pgcuet.samarth.ac.in/index.php/app/registration/instructions என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.


* அதில், பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும். 


* முன்பதிவு செய்ததும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். 


* விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 


* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும். 


கூடுதல் தகவல்களுக்கு: https://nta.ac.inhttps://pgcuet.samarth.ac.in


தொடர்புகொள்ள: 011 4075 9000


இ- மெயில் முகவரி: cuet-pg@nta.ac.in