மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை யுஜிசி தலைமவர் ஜெகதீஷ் குமார் இன்று வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்'' என்று ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் எனவும் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு இதுவரை 10.46 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. ஜூன் 18ஆம் தேதி வரை இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 2022-23ஆம் கல்வி ஆண்டில் 42 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இந்தத் தேர்வை நடத்துகின்றன. கணினி முறையில் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்