College Admission:  164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.


3 லட்சம் மாணவர்கள்


தமிழ்நாட்டில் கடந்த மே 8ஆம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணியைத் தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டியது. இதன்படி, கல்லூரி கல்வி இயக்குனரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த மே 8-ம் தேதி தொடங்கியது.  மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்தனர்.


மும்முரமாக நடைபெற்ற இந்த மாணவர் சேர்க்கை இடங்களுக்கு, சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,15,752 மாணவர்களும், 1,28,274 மாணவிகளும், 78 மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.


அதனை தொடர்ந்து, தமிழ் மொழி பட்டப்படிப்புக்கு தமிழ் மொழியில் பயயின்றவர்களுக்கான தனி தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசைப் பட்டியலும் வெளியிட்ப்பட்டது. 


இன்று கலந்தாய்வு


இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.  விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்குக் கலந்தாய்வு இன்று முதல் 31ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. அந்தந்தக் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.


அதைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12ஆம் தேதி 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Teachers Transfer Counselling: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - முழு விவரம் இதோ