தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ கோவை அரசு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ திறன்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு மையங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர் கூறியது;


’’கோவை மாணவர்களை சந்திக்கும்‌போது, எப்போதுமே மனதுக்கு கொஞ்சம்‌ இனிமையாக இருக்கும்‌.


கோவை மாணவர்கள்‌ மிகவும்‌ திறமையானவர்கள்‌


கோவை மாணவர்கள்‌ நீங்கள்‌ உற்சாகமானவர்கள்‌. உறுதியானவர்கள்‌. உங்களைப்‌ பற்றி பேசினால்‌ மட்டுமே நீங்கள்‌ கைத்தட்டுகிறீர்கள்‌ அந்த அளவுக்கு மிகவும்‌ திறமையானவர்கள்‌.


எல்லோரையும்‌ போல படித்தோம்‌, வேலைக்கு சென்றோம்‌ என்று நினைப்பவர்கள்‌ நீங்கள்‌ இல்லை. நீங்கள்‌ படித்து முடித்துவிட்டு, நான்கு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும்‌ என்று உறுதியோடு படிப்பவர்கள்‌ இந்த கோவை மாணவர்கள்‌.


Student Community மட்டும் அல்ல


அதனால்‌தான்‌, கோவை மாணவர்களை நாம்‌ எப்போதும்‌ Student Community-ஆக மட்டும்‌ பார்ப்பதில்லை, எதிர்கால enterprising community-ஆக இந்த கோவை மாணவர்களை, திராவிட மாடல்‌ அரசு பார்க்கின்றது. அதிலும்‌ குறிப்பாக என்ஜினியரிங்‌ மாணவர்கள்‌ நீங்கள்‌ எல்லாம்‌, நிறைய ஃபார்முலாஸ் எல்லாம்‌ படிப்பீர்கள்‌. அதுபோல, தமிழ்நாட்டில்‌ இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களுடைய Problems Solve செய்வதற்கான ஒரு ஃபார்முலா என்னவென்றால்‌, அது தான்‌ நம்முடைய  முதலமைச்சரின் 'திராவிட மாடல்‌ ஃபார்முலா'.


நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ மூலம்‌ பள்ளிகளில்‌ வழிகாட்டி வகுப்புகள்‌, கல்லூரிகளில்‌ திறன்‌ பயிற்சிகள்‌, வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்படுகின்றன.


30 லட்சம் பேருக்கு ஒளியேற்றிய நான் முதல்வன்


நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ இதுவரை 30 லட்சம்‌ இளைஞர்களின்‌ வாழ்வில்‌ ஒளியேற்றி வைத்துள்ளது. இதுவரைக்கும்‌ இரண்டு லட்சம்‌ மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பைப்‌ பெற்றுக்‌ கொடுத்திருக்கிறது.


உங்களுக்குத்‌ தேவையான வேலைவாய்ப்பினை உருவாக்கித்‌ தர இந்த அரசு எப்போதும்‌ உங்களுக்குத்‌ துணையாக ஆருக்கும்‌. இன்றைக்கு இங்கே தொடங்கப்படும்‌ இந்த பிளேஸ்மெண்ட்‌ சென்டர்ஸை, திறன்‌ பயிற்சி (skill training) தேவைப்படுவோர்‌, வேலை தேடுபவர்‌ என யார்‌ வேண்டுமானாலும்‌ அணுகலாம்‌. இந்த மையங்கள்‌ மூலம்‌, பல ஆயிரம்‌ மாணவர்கள்‌, வேலைவாய்ப்பைப்‌ பெற வேண்டும்‌. தொழில்‌ முனைவோராக உயர வேண்டும்’’‌.


இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.