வேலை கிடைக்காதா என ஏங்கும் தகுதியும், திறனும் வாய்ந்த இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. 


மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு நிர்வாக பயிற்றுநர் (Management Trainee) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
மொத்தம் 588 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.80 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


மேலாண்மை : மத்திய அரசு 


மொத்த காலிப் பணியிடங்கள் : 588 


பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் : 


Mining - 253
Electrical - 117 
Mechanical - 134 
Civil - 57 
Industrial Engineering - 15 
Geology - 12 


கல்வித் தகுதி: Geology பணிக்கு Geology, Applied Geology, Geophysics, Applied Geophysics உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மற்ற பிரிவுகள் பணிக்கு தொடர்புடைய பொறியியல் பிரிவில் BE, B.Tech, B.Sc. (பொறியியல்) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 


ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.1,80,000 ஊதியமாக வழங்கப்படும்.  


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் குறிபிட்டப்பட்டுள்ள கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/ எனும் இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். 


கடைசி நாள்: விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 09.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,180 எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. 


தேர்வு முறை : விண்ணப்பதாரர் கேட் 2021 பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.   இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.coalindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


தகுதி உடையவர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். நல்ல வேலை, நம்ம ஊதியம் என அரசுப்பணி காத்திருக்கிறது. மேலே குறிப்பிட்ட இணைய வழியில் விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெறலாம்.