அரசுப்பள்ளிகளில் 9, 10ஆம் வகுப்புகளைத் தொடர்ந்து 11, 12ஆம் வகுப்பிலும் தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்பட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால் பாடப்பிரிவுகள் மூடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக 9,10-ம் வகுப்புகளில் அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து 11, 12-ம் வகுப்பிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர், சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். 

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் Basic Mechanical Engineering,  Agricuttural Science, Textile and dress designing, Agriculture Science, Office Management & Secretaryship, Accountancy & Auditing ஆகிய படிப்புகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இல்லாமை, ஓய்வுபெறுதல், போதிய மாணவர் சேர்க்கை இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுகின்றன. 

அரசு மேல்நிலைப்பள்ளிகளில்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ மூலம்‌ / மாற்றுப் பணி ஆசிரியர்கள்‌ மூலம் ‌/ஆசிரியர்கள் இன்றி செயல்பட்டு வரும்‌ தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில்‌ 2022-23 கல்வியாண்டு முதல்‌ 11 ஆம்‌ வகுப்பில்‌ மாணவர்‌ சேர்க்கை மேற்கொள்ளக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதுடன்‌, கீழ்க்காண்‌ பள்ளிகளை கண்டறிந்து, இப்பள்ளிகளில்‌ 2022-23ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ பள்ளிகளின்‌ பெயர்களுக்கெதிரே
தெரிவிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பிரிவுகளை அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால்‌ முடிவுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியின் பெயர் 2022 -2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ பள்ளியின்‌ பெயர்‌ முடிவுக்குக் கொணரப்பட வேண்டிய தொழிற்கல்வி பிரிவு    காரணம்‌
G.A.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்‌   Basic Mechanical Engineering  இப்பிரிவிற்கெனெ அரசு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை
G.N.அரசு மேல்நிலைப்பள்ளி, குருவிகுளம்‌  Agricuttural Science  இந்த ஆசிரியர்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஓய்வு பெறுவதால்‌
மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி Textile and dress designing இந்த ஆசிரியர்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஓய்வு பெறுவதால்‌
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்‌   Agriculture Science இந்த ஆசிரியர்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஓய்வு பெறுவதால்‌
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி   Office Management & Secretaryship  இந்த ஆசிரியர்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஓய்வு பெறுவதால்‌
அரசு மேல்நிலைப்பள்ளி, புல்லுக்காட்டு வலசை  Accountancy & Auditing இப்பிரிவிற்கென அரசு ஆசிரியர்‌  நியமிக்கப்படாததால்‌
AMC அரசு மேல்நிலைப்பள்ளி, கரிவலம்‌ வந்தநல்லூர்‌  Accountancy & Auditing இப்பிரிவிற்கென அரசு ஆசிரியர்‌  நியமிக்கப்படாததால்‌
அரசு மேல்நிலைப்பள்ளி, திருமலாபுரம்‌  Accountancy & Auditing இப்பிரிவிற்கென அரசு ஆசிரியர்‌  நியமிக்கப்படாததால்‌
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆய்க்குடி  Accountancy & Auditing  இப்பிரிவிற்கென அரசு ஆசிரியர்‌  நியமிக்கப்படாததால்‌

 

மேற்காண்‌ தொழிற்கல்வி பிரிவுகளில்‌ 2022-23ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ 11ஆம்‌ வகுப்பில்‌ மாணவர்கள்‌ சேர்க்கையினை நிறுத்தம்‌ செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.