கிளாட் எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (NLUs) பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) பதிவுச் செயல்முறையை விரைவில் நிறைவு செய்ய உள்ளது. சட்டம் பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 31, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளமான consortiumofnlus.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கிளாட் தேர்வு; ஓர் அறிமுகம்

மத்திய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test- CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் ஒரு ஆண்டு எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated Ll.B. மற்றும் One year Ll.M. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

2026ஆம் ஆண்டுக்கான கிளாட் தேர்வு டிசம்பர் 7, 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) கிளாட் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க, அவகாசம் தற்போது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

CLAT 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்டெப் 1. consortiumofnlus.ac.in என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.ஸ்டெப் 2. முகப்புப் பக்கத்தில் "CLAT 2026 பதிவு" என்பதை கிளிக் செய்யவும்.ஸ்டெப் 3. உங்கள் மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பதிவுசெய்து, உங்கள் தனிப்பட்ட, கல்வி மற்றும் வகைத் தகவல்களை நிரப்பவும்.ஸ்டெப் 4. உங்கள் புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.ஸ்டெப் 5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.ஸ்டெப் 6. படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்காலக் குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.

தேர்வு முறை

இளங்கலை கிளாட் தேர்வில் 120 எம்சிக்யூ தேர்வு கேள்விகள் (MCQs) பின்வரும் பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்:• ஆங்கில மொழி• நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு• சட்டப் பகுத்தறிவு• தர்க்கப் பகுத்தறிவு• அளவுசார் நுட்பங்கள்

கூடுதல் தகவல்களுக்குhttps://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

இ - மெயில் முகவரி : clat@consortiumofnlus.ac.inதொலைபேசி எண்: 08047162020