அரசு தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பெங்களூருவில்  RIESL சார்பில் CELT Programme 16.1.2025 முதல் 11.02.2025 பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர், அனைத்து மாவட்ட முதன்மை தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


எங்கே? எப்போது?


The Regional Institute of English, South India (RIESL) Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு ஜனவரி 16 முதல் பிப்ரவரி 14 வரை 30 நாட்கள் CELT Programme பயிற்சியானது உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்பட உள்ளது. மேலும், இந்தப் பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். 


எனவே மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுள், ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் விதம் தேர்வு செய்ய வேண்டும்.


ஆசிரியர்கள் தேர்வு எப்படி?


தொடர்ந்து RIESL Bangalore விருந்து பெறப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றி தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். பிறகு, Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கையொப்பம் பெற வேண்டும்.


அதை Scan செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி சார் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: 'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!