2026-ம் ஆண்டிற்கான 'சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை' திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு என்ன தகுதி? எவ்வளவு உதவித் தொகை? விண்ணப்பிப்பது எப்படி? கீழே விரிவாகக் காணலாம். 

Continues below advertisement

பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பல்வேறு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஆதரவுத் திட்டங்களைச் (CBSE Scholarships and Education Support) செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான 'சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை' திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்களின் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கான கல்விச் செலவுகளை ஈடுகட்ட மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

Continues below advertisement

இந்த உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற மாணவர்களுக்கான தகுதிகள் என்ன? தேர்வு முறை எப்படி இருக்கும்? எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்? அதன் கால அளவு என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

  1. சிபிஎஸ்இஒற்றைப்பெண்குழந்தைஉதவித்தொகை (CBSE Single Girl Child Scholarship)

ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் கொண்ட பெற்றோருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  • தகுதிகள்: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலேயே தொடர வேண்டும். அந்தப் பள்ளியின் கல்விக் கட்டணம் மாதம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • தேர்வுமுறை : 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • உதவித்தொகை: தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • காலஅளவு: இந்த உதவித்தொகை 11 மற்றும் 12-ம் வகுப்பு என இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். (11-ம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கு உதவித்தொகை புதுப்பிக்கப்படும்).
  1. கல்லூரிமற்றும்பல்கலைக்கழகமாணவர்களுக்கானஉதவித்தொகை (Central Sector Scheme of Scholarship - CSSS)

பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதேசமயம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

  • தகுதிகள்: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 பெர்சன்டைல் அல்லது அதற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் வழக்கமான இளங்கலை அல்லது முதுகலை படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
  • தேர்வுமுறை: 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் குடும்ப வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • உதவித்தொகையின்அளவு: இளங்கலை படிப்பின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு ரூ.12,000 வழங்கப்படும். தொழில்முறை அல்லது ஒருங்கிணைந்த படிப்புகளில் 4 மற்றும் 5-ம் ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.20,000 வீதம் வழங்கப்படும்.
  • காலஅளவு: இந்தப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறலாம்.
  1. எஸ்சி/ எஸ்டிமாணவர்களுக்கானசிபிஎஸ்இஉதவித்தொகை

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தகுதி அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  • தகுதிகள்: சிபிஎஸ்இ 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்வுகளில் குறைந்தபட்சம் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்ற எஸ்சி/எஸ்டி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • தேர்வுமுறை : இடஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு வகுப்பிற்கு தலா 50 மாணவர்கள் (33 SC, 17 ST) வீதம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • உதவித்தொகை, காலஅளவு: தேர்வாகும் மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்ட ஆண்டுக்கு ரூ.12,000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மூலமாகவோ அல்லது தேசிய உதவித்தொகை இணையதளம் வாயிலாகவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும்போது மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றைச் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.