மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அடுத்த (2026-27) கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த மாபெரும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

Continues below advertisement

மனப்பாடமுறைக்குமுற்றுப்புள்ளி

புதிய பாடத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமே, மாணவர்களிடம் உள்ள மனப்பாடம் செய்யும் பழக்கத்தை அடியோடு மாற்றுவதுதான். மதிப்பெண்களுக்காகப் படிக்கும் நிலையை மாற்றி, பாடத்தின் அடிப்படைக் கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு கற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக என்சிஇஆர்டி நிறுவனம் புதிய பாடப்புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சிந்தனைத்திறனுக்குமுக்கியத்துவம்

இந்த மாற்றத்தால், மாணவர்களின் சுயமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு நடைமுறை ரீதியாகத் தீர்வு காணும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் புத்தகச் சுமை மற்றும் பாடச்சுமையைக் குறைக்கும் வகையில், தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டு, காலத்திற்குத் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

Continues below advertisement

தேர்வுமுறையில்மாற்றம்

கற்பித்தல் முறையில் மட்டுமின்றி, தேர்வு முறைகளிலும் பெரிய மாற்றம் வரவுள்ளது. மனப்பாடம் செய்து அப்படியே எழுதும் வழக்கமான கேள்விகளுக்குப் பதிலாக, பாடத்தின் புரிதலைச் சோதிக்கும் வகையிலான கேள்விகள் அதிகம் இடம்பெறும். இது பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கும்.

பாடங்களைத்தேர்வுசெய்யும்சுதந்திரம்

அறிவியல் படிக்கும் மாணவர் கலை சார்ந்த பாடங்களையும், கலைப் பிரிவு மாணவர் அறிவியல் பாடங்களையும் தேர்வு செய்து படிக்கும் (Multidisciplinary approach) சுதந்திரம் வழங்கப்படும்.

ஒட்டுமொத்தத்தில், 2026-27 முதல் வரவிருக்கும் சிபிஎஸ்இ-யின் இந்தப் புதிய பாடத்திட்டம், ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், எதிர்கால சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் ஒரு திறன்மிக்க தலைமுறையை உருவாக்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.