சிபிஎஸ்இ நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நவம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பணிபுரியலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதய வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளி ஆகிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். இந்தத் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது. 

Continues below advertisement

நாடு முழுவதும் 20 மொழிகளில் 135 நகரங்களில் 18ஆவது தேசிய தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. கணினி முறையில் 2 ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறுகிறது.

2.30 மணி நேரம் தேர்வு

ஒவ்வொரு தேர்வும் 2.30 மணி நேரத்துக்கு நடைபெறுகிறது. குறிப்பாக காலை 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் மதியம் 2.30 முதல் 5 மணி வரையிலும் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் நவம்பர் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விண்ணப்பப் பதிவு தற்போது நவ.27ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

தேசிய தகுதித் தேர்வை எழுத பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://ctet.nic.in/apply-for-ctet-jan2024/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தொடர்ந்து  https://examinationservices.nic.in/ExamSysCTET/Root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNlnInppgro+sjEnB1eUk+3E என்ற இணைப்பை க்ளிக் செய்து, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

* இதில், விண்ணப்ப எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, லாகின் செய்து, விண்ணப்பிக்கலாம். 

* முதல்முறை விண்ணப்பிப்பவர்கள், முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். 

முழுமையான கையேட்டுக்கு தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2023/11/2023110320.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காண வேண்டியது அவசியம். 

கூடுதல் விவரங்களுக்கு https://ctet.nic.in