கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த முறை சிபிஎஸ்இ 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி முதல் பருவ பொதுத்தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் 2022ஆம் ஆண்டும் நடைபெறும் என்று கூறப்பட்டது. 


இந்நிலையில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பிற்கு முதல் பருவ தேர்வு வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல் 10 வகுப்பிற்கு பொதுத் தேர்வு வரும் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த முதல் பருவ பொதுத் தேர்வு எம்சிகியூ வடிவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தேர்வு மொத்தமாக 90 நிமிடங்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 


 






மேலும் வட மாநிலங்களில் இருக்கும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுகள் அனைத்தும் 11.30 மணிக்கு தொடங்கும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் எண்கள் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






அதேசமயம் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பிற்கு 114 பாடங்களையும், 10ஆம் வகுப்பிற்கு 75 பாடங்களையும் தற்போது அளித்து வருகிறது. இந்த பாடங்கள் அனைத்திற்கும் தேர்வு நடத்தினால் தேர்வுகள் சுமார் 40 முதல் 45 நாட்கள் நடக்க நேரிடும். ஆகவே இந்த பாடங்களில் அதிகபட்சமான பள்ளிகள் கற்று தரப்படும் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்இ  முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த முடிவு குறித்து பள்ளிகளுடன் கலந்து ஆலோசித்த பின்பு முழு அட்டவணை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!