சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு (term 2) வரும் ஏப்ரல் 26ம் தேதி முதல் தொடங்கும்.  மேலும், இந்த தேர்வு ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) மூலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    


 






 


கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த முறை சிபிஎஸ்இ 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி முதல் பருவ பொதுத்தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் 2022ஆம் ஆண்டும் நடைபெறும் என்று கூறப்பட்டது.  


 கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பிற்கு முதல் பருவ தேர்வு நடைபெற்றது. அதேபோல் 10 வகுப்பிற்கு பொதுத் தேர்வு வரும் 17ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த முதல் பருவ பொதுத் தேர்வு எம்சிகியூ வடிவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தேர்வு மொத்தமாக 90 நிமிடங்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சி பி எஸ் ஈ மாணவர்களுக்கான Term2 தேர்வுகள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, ICSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 09248082883 என்ற தொலைபேசி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று இந்திய பள்ளிக்கல்வி தேர்வுக்குழு கூறியுள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண 


மேலும், வாசிக்க:  


PM Modi's Interview: குடும்ப வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி - பிரதமர் மோடி