பள்ளிகளில் ஆளுநர் தமிழிசை ஆய்வு :


இன்று முதல் வீராமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டிடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி இயங்குகிறது. வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், திரு.வி.க. பள்ளியோடு இணைத்து ஒரே ஷிப்ட் முறையில் பாடம் படிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் போராட்டம், இடமாற்றம் குறித்து ஆளுநர் தமிழிசை, இன்று வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகளை சந்தித்தார்.  அப்போது தங்கள் பள்ளி முழு நேரம் இயங்கவும், கட்டடத்தை இடமாற்றம் செய்ய உதவியை கல்வித்துறை அதிகாரிகளுக்கும், ஆளுநருக்கும்  மாணவிகள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து ஆளுநர் தமிழிசை முதல்தளத்தில் உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த மாணவிகளோடு அமர்ந்து பேசினார்.


ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்,


வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான். அரசு பள்ளிகள், மருத்துவ மனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். குழந்தைகள் படிக்க வேண்டும் என போராடியதை பாராட்ட என வந்தேன். பெண்கள் தங்களின் தேவையை உரக்க சொல்லியுள்ளனர். அதற்கான வழியை அரசும், சமுதாயமும் பெற்றுத் தந்துள்ளது. அதற்காக அனைத்திற்கும் போராட வேண்டும் என்பது இல்லை. பள்ளி கல்வித்துறையிடம் பரிசோதனைக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளேன். அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் போதிய வசதிகளோடு அமைத்துத்தர வேண்டும். இதில் தனியார் பங்களிப்பும் இருந்தால் நல்லது. அரசு பள்ளிகளை மேம்படுத்த புதுவையை சேர்ந்த தொழிலதிபர்கள் முன்வந்தால் நன்றாக இருக்கும்.


டிஜிட்டல் வகுப்பறை


CBSE பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் வகுப்பறை ஏற்படுத்த போகிறோம். இவற்றை முன்பே இருந்த ஆட்சியாளர்கள் சரி செய்திருக்கவேண்டும். போதிய வசதிகள் இல்லாதது வருத்தம் தரக்கூடியது தான். இருப்பினும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்துதர தனி கவனம் செலுத்தவுள்ளோம். விரைவாக சுப்பிரமணிய பாரதியார் பள்ளியை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். CBSE பாடத்திட்டத்தால் புதுச்சேரியில் கல்வி புரட்சி ஏற்படும். CBSE பாடத்தில் தமிழ் நிச்சயம் இருக்கும். இந்த பாடத்திட்டம் தேசியஅளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும். 75 பள்ளிகளை பார்க்க வேண்டும் என கருதி 50 பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். அதில் உள்ள குறைபாடுகளை நான் கூறினேன், அதை சரிசெய்துள்ளனர்.


நடவடிக்கை


வகுப்பறையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவது குறித்து கூறினர். அந்த குறை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கனவு கண்டு வருகிறோம். அதற்கேற்ப கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். தற்போதைய நிலை கவலையளிக்கக் கூடியதுதான், வருத்தம் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலத்தில் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்கால நோய்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.