பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது. இதை மாணவர்களும் பெற்றோர்களும் https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து பார்க்கலாம்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் தவித்து வந்தனர்.
முன்னதாக, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. குறிப்பாக நாடு முழுவதும் மற்றும் 26 நாடுகளிலும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
குறிப்பாக 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையிலும், சில தேர்வுகள் 1.30 மணி வரையிலும் நடைபெற்றன. செய்முறை தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன.
இச்சூழலில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆண்டுவாரியாகத் தேர்ச்சி விகிதம்:
- 2023- 87.33 சதவீதம்
- 2022- 92.71 சதவீதம்
- 2021- 99.04 சதவீதம் (கொரோனா காரணமாக 2020- 2021ஆம் கல்வி ஆண்டில் மட்டும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டிருந்தது. )
- 2020- 91.46 சதவீதம்
- 2019- 91.10 சதவீதம்
- 2018- 86.7 சதவீதம்
- 2017- 93.12 சதவீதம்
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
மாணவர்களும் பெற்றோர்களும் https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
அதேபோல மாணவர்கள் https://testservices.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேர்வு முடிவுகளைக் காணலாம். அதில் மாணவர்களின் பதிவு எண், பள்ளி எண், நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
https://cnr.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm
https://cbseresults.nic.in/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm
தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட இணைய தள முகவரிகளை க்ளிக் செய்தும், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: Free Coaching: மக்களே... ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசுத் தேர்வுகள்; 100 நாள் இலவச சிறப்புப் பயிற்சி- பங்கேற்பது எப்படி?