மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Continues below advertisement

எந்தெந்த நாடுகளில் ஒத்திவைப்பு?

பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், இந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக மார்ச் 5ஆம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மீண்டும் ஆலோசிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மார்ச் 7ம் தேதி முதல் திட்டமிட்டுள்ள தேர்வுகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Continues below advertisement

போர்ப் பதற்றம்

ஏற்கெனவே மார்ச் 2ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வுகள், போர்ப் பதற்றம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.