முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் செப்.13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் வழங்கப்படும் மேலாண்மைப் படிப்புகளில் கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


முக்கியத் தேதிகள் என்ன?


குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது. 


இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 5ஆம் தேதி அனுமதிச் சீட்டு வெளியாக உள்ளது.


கேட் தேர்வு எப்போது?


கேட் தேர்வு நாடு முழுவதும் 170 நகரங்களில் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐஐஎம் கல்கத்தா கேட் தேர்வை நடத்துகிறது. 3 அமர்வுகளாகத் தேர்வு நடக்க உள்ளது. காலை 8.30 மணி முதல் 10.30 வரையில் ஓர் அமர்வும் மதியம் 12.30 முதல் 2.30 மணி வரையில் இரண்டாவது அமர்வும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை 3ஆவது அமர்வும் நடைபெற உள்ளது.


3 அமர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் நார்மலைஸ் ஆக்கப்படும். பிறகு அவை பர்சன்ட்டைலாக மாற்றப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம்


எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு - ரூ.1,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற அனைத்துத் தேர்வர்களுக்கும் - ரூ.2500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?



கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.digialm.com/per/g06/pub/32842/EForms/CAT24/CAT_2024_Information_Bulletin.pdfhttps://iimcat.ac.in/


2023 NIRF தரவரிசையின் படி, பின்வரும் ஐஐஎம் நிறுவனங்கள் நாட்டின் சிறந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


ஐஐஎம் அகமதாபாத்
ஐஐஎம் பெங்களூரு
ஐஐஎம் கோழிக்கோடு
ஐஐஎம் கல்கத்தா
ஐஐஎம் டெல்லி
ஐஐஎம் லக்னோ
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், மும்பை
ஐஐஎம் இந்தூர்
XLRI- சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்
ஐஐடி பம்பாய்
இந்திய மேலாண்மை நிறுவனம், ராய்ப்பூர்
இந்திய மேலாண்மை நிறுவனம், ரோஹ்தக்
மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம், குருகிராம்
ஐஐடி காரக்பூர்
ஐஐடி சென்னை