2024- 25ஆம் கல்வி ஆண்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு  ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் செப்.26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற பி.எட். எனப்படும் இளங்கலை கல்வியியல் படிப்பை முடித்திருக்க வேண்டியது அவசியம்.  தமிழ்நாட்டில் பி.எட். படிப்பில் அரசுக் கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இவற்றின் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.


விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?


பொதுப் பிரிவினருக்கு ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. . எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250.


தரவரிசைப் பட்டியல் எப்போது?


இதைத் தொடர்ந்து 30ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதை அடுத்து, அக்டோபர் 14 முதல் 19 வரை கலந்தாய்வு நடைபெறும்.


விண்ணப்பிப்பது எப்படி?


இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


இணைய வசதி இல்லாத மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction_bed.pdf?t=1726548822934 என்ற இணைப்பை க்ளிக் செய்து, எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து அறியலாம்.


எந்தெந்த இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் எந்தெந்த கல்வியியல் படிப்புகளில் சேரலாம் என்பது குறித்த தகுதியை https://static.tneaonline.org/docs/arts/bed-eligibility.pdf?t=1726548822934 என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 


முதலாம் ஆண்டு வகுப்பு எப்போது?


விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் செப்.23ஆம் தேதி தொடங்குகின்றன. 


கல்லூரிகளின் பட்டியல் குறித்து அறிய: https://static.tneaonline.org/docs/arts/bed-booklet.pdf?t=1726548822934


மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்களை அறிய https://static.tneaonline.org/docs/arts/bed-guidelines.pdf?t=1726548822934 என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: https://bed.tngasa.in/


இதையும் வாசிக்கலாம்: Kalai Thiruvizha: கலைத்திருவிழா அவகாசம் நீட்டிப்பு; சிறப்புப் பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்- விவரம்