பயிலும்‌ பள்ளியிலேயே வங்கிக்‌ கணக்கு - அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ அப்பள்ளியிலேயே வங்கிக்‌ கணக்கு தொடங்குவதற்கு புதிய பதிவுகள்‌ மற்றும்‌ வங்கிக்‌ கணக்கு எண்‌ உடன்‌ ஆதார்‌ எண்ணை இணைத்தல்‌ தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, தொடக்கக் கல்வித்துறை, தனியார் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.


அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கான வங்கிக்‌ கணக்குகளை பள்ளியிலேயே தொடங்குதல்‌ சார்ந்து கீழ்க்கண்ட விவரங்கள்‌ தெரிவிக்கப்பட்டுள்ளன.


(i) பள்ளிக்‌ கல்வி துறையின்‌ கீழ்‌ அனைத்து பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ மாணவியர்களின்‌ நலனுக்காக பல்வேறு திட்டங்கள்‌ வகுத்து முனைப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து மாணவர்களும்‌ இடைநிற்றல்‌ இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள்‌ மற்றும்‌ ஊக்க தொகைகள்‌ வழங்கப்பட்டு வருகிறது.


உதவித்தொகை வழங்க, பயனாளர்களின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம்‌ செலுத்திடும்‌ முறை


இவ்வுதவித்‌ தொகை மற்றும்‌ ஊக்க தொகை உரிய பயனாளர்களான மாணவர்களுக்கு குறித்த நேரத்தில்‌ நோடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும்‌ நோக்கில்‌ நேரடிப்‌ பயனாளர்‌ பரிமாற்றம்‌ (DBT) மூலம்‌ பயனாளர்களின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம்‌ செலுத்திடும்‌ முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறாக நேரடி பயனாளர்‌ பரிமாற்றம்‌ (டிபிடி செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும்‌ ஒரு வங்கிக்‌ கணக்கு கட்டாயம்‌ தேவைப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு வங்கிக்‌ கணக்கு புதியதாக துவங்குவதற்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை மற்றும்‌ வங்கிகள்‌ பணிகள்‌ சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ வகுக்க வேண்டியது அவசியமாகிறது.


இரண்டு நிலைகளில் வங்கிக்‌ கணக்கு தொடக்கம்


பள்ளிகளில்‌ வங்கிக்‌ கணக்கு துவக்குதல்‌ சார்ந்து மாணவர்களின்‌ வயது அடிப்படையில்‌ இரண்டு நிலைகளில்‌ மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌. குறிப்பாக 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், 10 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும்.


இவ்வாறு தொடக்கக் கல்வித்துறை, தனியார் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.


நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முழுமையாகக் காண: