இக்னோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசு பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம். இங்கு தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் 56 பிராந்திய மையங்களைக் (RC) கொண்டுள்ளது. 11 அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மையங்களையும்  ( 6 IGNOU- Army RRC, 4 IGNOU-Navy RRC, 1- IGNOU- Assam Rifles RRC) வைத்துள்ளது. அதேபோல நாடு முழுவதும் 2 ஆயிரம் கற்போர் ஆதரவு மையத்தையும் தன்வசம் வைத்துள்ளது. இந்த நிலையில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.


இதுகுறித்து சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


’’இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் தொடங்கப்பட்டுள்ளது.


கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், 2024 ஜூலை மாத மாணவர் சேர்க்கையில் சேரலாம். 


விண்ணப்பிப்பது எப்படி?


தொலைதூரக் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் இணையவழியில் ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், https://ignouadmission.samarth.edu.in/index.php/registration/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.


எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு குறிப்பிட்ட இளங்கலை படிப்புகளில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. 


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் பல்வேறு ஆன்லைன் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இதில் சேர  https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். 044-26618040 என்ற தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்’’. 


இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு:  011-29571301 அல்லது 011-29571528.


இ- மெயில்: csrc@ignou.ac.in


விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது, கட்டணம் செலுத்துவது, பொதுவான கேள்விகள் குறித்து பதில் அறிய  https://ignouadmission.samarth.edu.in/index.php/site/faq என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.