சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில, நேரடி மாணவர் சேர்க்கைக்கு 14.11.2025 -க்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான ஒரு வருட காலத்திற்கான காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாத காலியிடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு
1) Anathesia Technician, 2) Theater Technician,
3) Emergency Care Technician, 4) Dialysis Technician, 5) Orthopaedic
Technician, 6) ECG / Treadmill Technician, 7) Respiratory Therapy Technician.
8) Cardio Sonography Technician, 9) Cardic Catheterisation Lab Technician.
10) ECG EMG Technician, 11) Psychiratric Support Worker.
12) Medical Record Technician, 13) Home Health Care.
14) Multi-Purpose Hospital Worker
பாடப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதில், சென்னை மருத்துவக் கல்லூரியில் 254 காலிப்பணியிடங்களும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 393 காலிப்பணியிடங்களும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 319 காலிப்பணியிடங்களும், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் 48 காலிப்பணியிடங்களும், கலைஞர் மருத்துவக் கல்லூரியில் 135 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 1149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
என்ன தகுதி?
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பயில, விண்ணப்பதாரர் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் 40 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். Multi Purpose Hospital Worker பாடப்பிரிவிற்கு மட்டும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் உதவித்தொகையும் வழங்கப்படும்.
தகுதியுடைய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட சான்றிதழ் வகுப்புகளில் சேர அந்தந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை முதல்வர் அவர்களை நேரில் 14.11.2025-க்குள் தொடர்பு கொண்டு ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/