அரியலூர்: வாரணவாசி கிராமம் அருகே இன்று காலை எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில், அதில் இருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. இந்தச் சம்பவத்தால் அரியலூர் - திருச்சி, தஞ்சை வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement


அரியலூரில் சிலிண்டர் லாரி விபத்து 


அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் நடந்துள்ளது. இந்த லாரி திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் இன்டேன் கேஸ் சிலிண்டரை திருச்சி குடோனில் இருந்து அரியலூர் டிலருக்கு லாரி மூலம் சிலிண்டரை ஏற்றி கொண்டு வந்துள்ளார்.


அடுத்தடுத்து வெடித்து சிதறிய சிலிண்டர்கள்.


அப்போது அரியலூர் அருகேயுள்ள வாரணவாசி கிராமத்தில் திருப்பத்தில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் விழுந்து சிலிண்டர் வெடித்துள்ளது. இதையடுத்து அருகேயுள்ள வீட்டில் உள்ளவர்களை உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தி வெளியில் கொண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினரும் மற்றும் காவல் துறையினரும் அருகில் செல்ல முடியாமல் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் உள்ளே செல்ல முடியாமல் திணறி வந்தனர்.


போக்குவரத்து மாற்றம்!


மேலும் இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நேரில் வந்து ஆய்வு செய்து வந்தனர். மேலும் இதனையடுத்து அரியலூரில் இருந்து திருச்சி, தஞ்சை செல்லும் போக்குவரத்துகளை மாற்றி அமைத்து பொதுமக்கள் சிரமம் அமையாமல் போக்குவரத்து மாற்றி அமைத்து காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது சிலிண்டர் ஓரளவு வெடிக்காமல் இருப்பதால் தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.


டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பி நிகழ்ந்த சம்பவத்தில், பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சிலிண்டர் லாரி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.