தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத் தாள்களின் நகலினை இணையதளத்தில் டிச.15 பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மற்றும் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’செப்டம்பர் 2021 தொடக்க கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாட்கள் ஒளிநகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் விடைத்தாட்களின் ஒளிநகல்களை 15.12.2021 முதல் 17.12.2021 வரையிலான நாட்களில் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று Notification என்பதை க்ளிக் செய்தால் திரை தோன்றும்.
திரையில் Diploma in Elementary Education Examination என்ற வாசகத்தினை க்ளிக் செய்து பின்னர் DEE Exam September 2021 scan copy pdf downloading வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்- II / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Revalution/Retotal -II application form for DEEE என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்: 16.12.2021 முதல் 17.12.2021 வரை
தேர்வர் வகை- விடைத்தாளின் மறுகூட்டலுக்கு –IIக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205/- கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வர் வகை- விடைத்தாளின் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.505/- செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் இடம்
தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்’’.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளைஅறிய Abpnadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தில் தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்