இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் சென்னை ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரத்தைக் காணலாம்.
சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டுகள் கால அளவுள்ள பட்டயப்படிப்புகளான 1. ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் 2. நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு ஆகியவற்றில் சேர மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
எப்போதிலிருந்து விண்ணப்பிக்கலாம்?
இந்தப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 26.09.2023 முதல் 04.10.2023 மாலை 05.00 மணி வரை மட்டும் அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in -ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்.
விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவம்: ரூ.350/-
இக்கட்டணத்தை SBI Collect எனும் இணையதள சேவை வாயிலாக செலுத்தி அதற்குரிய பணப்பரிமாற்ற குறியீட்டு எண்ணிணை அதற்குரிய அசல் ரசீதினையும் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிப்பதன் மூலமாக உரிய விண்ணப்பக் கட்டணத்தினை செலுத்தியதாகக் கருதப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம் / பட்டியல் இனம் (அருந்ததியினர்) / பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மேற்படி விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப்படிவத்திற்கான தொகை ரூ.350/-ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப்படிவத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து அலுவலக முகவரிக்கு 04.10.2023 மாலை 05.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி:
செயலாளர், தேர்வுக்குழு,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை ஆணையரகம்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,
அரும்பாக்கம், சென்னை – 600 106.
பொது விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள். 04.10.2023 மாலை 05.00 மணி வரை.