தமிழகத்தில் பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவப்படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று  முதல் துவங்குகிறது என மருத்துவக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் , கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை விட அதிகளவில் பல மாணவர்கள் தேர்வு செய்வது நர்சிங் படிப்புகள் தான். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கிடையே நர்சிங் தான் படிக்க வேண்டும் என்று ஆர்வம் அதிகளவில் உள்ளது. இதற்காகவே எந்த படிப்புகளுக்கும் சேராமல் காத்திருப்பார்கள். இந்நிலையில் தற்போது நர்சிங்  உள்பட பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான அறிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு  எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? கடைசி தேதி என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார் மருத்துவக்கல்லூரிகளில் 2022- 2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி நர்சிங், பி.பார்ம்,பிஏஎஸ்எல்பி,, செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல்பட்டப்படிப்பு, பிபிடி,  பிஎஸ்சி  ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனாரி, பிஎஸ்சி கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, பிஎஸ்சி நியுரோ எலக்ரிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு இன்று முதல் வருகின்றநவம்பர் 8 ஆம் தேதி வரை  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:


www.tnhealth.tn.gov.in ,  www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டிருக்கும் கல்விச்சான்றிதழ், வருமானவரிச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் போன்ற பல்வேறு விபரங்களை பதிவேற்றம் செய்து பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது புகைப்படம், கையெழுத்து போன்றவற்றை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கும் போது இணைத்துக்கொள்ள வேண்டும்.





இதில் முக்கியமாக விண்ணப்பதாரர்கள் எப்போதும் தொடர்பில் உள்ள உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி போன்றவற்றை விண்ணப்பத்தில் மறக்காமல் பதிவிட்டிருக்க வேண்டும். அப்போது தான் எப்பொழுது உங்களது கவுன்சிலிங் , எப்போது வர வேண்டும் என்பது குறித்து நமக்கு தெரியும். இறுதியாக நீங்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை, "செயலாளர், மருத்துவக் கல்வி தேர்வுக்குழு, அரசு மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை-10' என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.