Annual Exam 2025: இன்று தொடங்கிய முழு ஆண்டுத் தேர்வு; விடுமுறை எப்போது? பள்ளிகள் திறப்பில் மாற்றம்?

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.  1, 2, 3-ம் வகுப்புகளுக்கு காலையும் 4 ,5ஆம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

Continues below advertisement

தமிழக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் இன்று (ஏப்.7) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கு தேர்வு விடுமுறை தேதிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று காணலாம்.

Continues below advertisement

கல்வி ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வு

மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தின்கீழ் படித்த  11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி, இன்னும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் நாளை (ஏப்ரல் 8) தொடங்குவதாக இருந்தது. இந்தத் தேர்வு 24ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

முன்கூட்டியே தொடங்கும் இறுதித் தேர்வு 

எனினும் கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இறுதித் தேர்வு முன்கூட்டியே தொடங்கும் என்று மறு அறிவிப்பு வெளியானது. இதன்படி, ஏப்ரல் 7 முதல் 17ஆம் தேதி வரையிலான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.  1, 2, 3-ம் வகுப்புகளுக்கு காலையும் 4 ,5ஆம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

கோடை விடுமுறை எப்போது?

இந்தத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து, 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12 முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. அதேபோல  4, 5ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25-ம் தேதியும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

பள்ளிகள் திறப்பில் மாற்றமா?

வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். எனினும் தற்போது வெயில் காய்ச்சி எடுத்து வருவதால், அப்போதைய சூழலைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola