அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம், மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், விடைத்தாள் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜி.எஸ்.டி பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 23 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 



 தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் மாணவர்களிடம் ஒரு தாளுக்கு மறுமதிப்பீடு செய்ய 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக, விசாரிக்க  விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. 



இந்தநிலையில், 18% ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக மாணவர்களிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. மேலும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அண்ணா பல்கலைக்கழகம் விதித்த ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 






 


தொடர்ந்து, இந்த வரி விதிப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு எந்த ஜி.எஸ்.டி யும் விதிக்க படவில்லை. கல்வி ஆண்டு முடிந்து வெளியே சென்ற மாணவர்களுக்கும், சில சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், இடமாற்றம் சான்றிதழ், நகல் சான்றிதழ், வேலைக்கு செல்ல சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே 18 சதவீதம் ஜி.எஸ்.டி வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறோம். தொடர்ந்து, ஒராண்டுக்கு தோராயமாக 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்து வருகின்றனர். வெளி மாநிலம் மற்றும் நாடுகளில் வேலை செய்யும் இளைஞர்கள் பெரும்பாலோர் விண்ணப்பம் கேட்டு வருகின்றனர். அவர்களே இந்த வரி விதிப்பு என்றும், இதன் மூலம் படிக்கும் மாணவர்களும் எந்தவொரு பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண